தலைப்ப பார்த்து ஒன்னும் பெரிசா யோசிக்காதீங்க.எல்லாம் ஒரு buildup தான்.அதாவது நான் வலைப்பூக்களுக்கு புதியவன் என்பதைத்தான் அப்பிடி சொன்னேன். என்னஎழுதலாம் என்ன எழுதலாம்ன்னு யோசிச்சா ஒண்ணுமே வரல்ல .( டேய் டேய் மண்டையில இருந்தடானடா வரும்?)
நான் வலைப்பூ ஆரம்பித்து just 1 வாரம்தான் . புதுசா blogs பற்றி படிச்சிக்கிட்டு வாறன் . பாசயிடுவேன்னு நினைக்கிறேன் .எதாவது ஒரு துறையில எழுதினா நல்லதா இல்லாட்டி தமிழ் படம் மாதிரி மசாலாவா இருந்தா நல்லதான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எப்பிடியும் என்கிட்ட இருந்து உருப்படியான பதிவுகள் வர கொஞ்ச நாள் போகும். so எல்லாருக்கும் என்ன சொல்றேன்னா கொஞ்ச நாள் பொறுங்க. எப்பிடியும் ரஜினி அரசியலுக்கு வர முந்தி உருப்படியான பதிவு எழுதலாம்ன்னு நம்பிக்கை இருக்கு.