Wednesday, February 12, 2014

தூங்கிப்போன முஸ்அப்களும் விழித்திருக்கும் மதீனாக்களும்

தூங்கிப்போன முஸ்அப்களும் விழித்திருக்கும் மதீனாக்களும்

 



முஸ்அப் தெரியுமா உனக்கு.....?
அவ்ஸ்களும் 
கஸ்ரஜ்களும்படித்திருக்கிறாயா நீ......? 

மதீனா......
அதன் அழகு 
தெரியுமா உனக்கு......அதன் ஆன்மா 
அறிந்திருக்கிறாயா  நீ.....? 

களத்தில் கால் கடுக்க
 நடக்கும் நீ
காலை வேளைகளில்
 தூங்கிப்போகிறாய்...... 

வாய் வலிக்க குர்ஆன் பேசும்
உன் நாக்குகள்சுவைப்பதில்லை
 அதன் ருசிகளைஎப்போதும்...... 

அழைப்பின் நிலம் 
வாசிக்கும்
உன் கண்கள்
ஆபாசங்களை
 வெறுப்பதில்லை..... 

தூய தேசம் 
யாசிக்கும்
 உன் சிந்தனையில்
ஆங்காங்கே ஜாஹிலிய்யத் 
ஒட்டிகொண்டிருக்கிறது........ நீ கூறுவது போல் 
மாற்றம் வேண்டும்முதலில்
 என்னிடம்.........பிறகு 
உன்னிடம்...... 



ஆயிரமாயிரம் 
மதீனாக்கள்
 விழித்திருக்கின்றனஅவ்ஸ்களும்
 கஸ்ரஜ்களும் 
காத்திருகின்றார்கள்


அவர்களுக்கு வேண்டும்ஒரு 
முஸ்அப் இப்னு உமைர்......
எழுந்து நிற்போம்நீயும் நானும் 
முஸ்அப்பாய் 
மீண்டும் 
ஒரு மதீனா அல்ல......
பல மதீனாக்கள்......இன்ஷா அல்லாஹ் 


 (அல்ஹஸனாத் மே 2012 இதழ் )

Friday, November 23, 2012

இது எந்திரன் நேரம்



மனிதங்கள் மறக்கப்பட்டு
உணர்வுகள் ஊமையாய்ப்போன
யுகங்களில்
நமதான உயிர்வாழ்தல்கள் ....
நரன்களின் நரம்புகள்
புறக்கணிக்கப்பட்டு
இரும்பில் இருதயங்கள்
பொருத்தப்படுகின்றன.


ஜீனோவும்,
இயந்திராவும்,
சிட்டியும்
நம்மை ஆள்கிறார்கள்.

போலி பிரமாண்டங்களில்
நீயும் நானும்
தெரிந்தே ஏமாறுகிறோம்.

காலங்கள் மாறினாலும்
காட்சிகள் மாறவில்லை.

மிருகமாய் போன
மனிதன் இன்று
எந்திரனாகிறான்.

மனிதன் இன்னும்
மனிதம் காணவில்லை.

கேட்டால் நீ
சொல்வாய்
"அடேய்! இது எந்திரன் நேரம் "


(எங்கள் தேசம் 2010 நவம்பர் 15-30 இதழ்)

ஈத் முபாரக்


சபர் மாதத்து
இறுதிபிறைகளில்
நான் வியந்து போகின்றேன்
ஏன் நீயும்தான்.........


யார் கண்பட்டதோ தெரியவில்லை
உன் முன் வளர்ந்த குழந்தைகள்
உனக்கே சவால் விடுகின்றன...
'பொடிப்பயல்கள்'
நீ தந்த காய்ந்த ரொட்டிகளை
தின்று விட்டு
உனக்கே ஏசுகிறார்கள்
'துரோகிகள்'

பிர்அவனின் எச்ச சொச்சங்களை
நீ காண்பித்தாய்......
உன்னை பார்த்து
என் பாட்டி சொன்னாள்
"கமால் அப்துல் நாசர் இன்னும் இறக்கவில்லை "
என்று...

படைவீரனான எனக்கு
உன் கட்டளைகள் கேட்கவில்லை
தஹ்ரீர் சதுக்கத்து
கூக்குரல்களில்
அவை அடங்கிபோகின்றன.

நன்றி கெட்டவனில்லை நான்
கடைசியாய் உனக்கோர் ஆலோசனை
ஹிஜ்ரத் செய்துவிடு மிஸ்ர் தேசத்தை

ஏனெனில் நாளை முதல்
தஹ்ரீர் சதுக்கத்து கற்களுடன்
சிறைச்சாலை கம்பிகளுடன்
பிரமிட் தேசத்து மணல்களுடன்
சேர்ந்து நானும் கூவுகிறேன்
உன்னை பார்த்து
"ஈத் முபாரக்" என்று ...

(எங்கள் தேசம் 2011 மார்ச் 1-15 இதழ்)

முரண்களின் ரசிகன்

 


                                                                                                                                                கரையோர நிலவொளி
காண ஆசை....!
கடல் இல்லை
எங்கள் ஊரில்...!

மழைத்துளிகளுக்காய் 
காத்திருகிறேன்....!
வெடித்துப்போன வரண்ட நிலத்தில்
படுத்தபடி...!
மலையோர தென்றல்
சுகம்தான்.....
மழை தேடுகிறேன்
நிறைய நாளாய்.....

மறுப்புகளின் வார்த்தை தாங்கும்
இதயம் இது...
முரண்களின் ரசிகன்
நான்.......!
உன் கோபக்கனல்கள்
இந்த சமுத்திரத்தை
ஒன்றும் செய்துவிடாது......

அதனால்தான் சொல்கிறேன்
என் கண்ணிலிருந்து
விழும் சொட்டுகண்ணீருக்கும்
உனக்கும்
சம்பந்தமில்லை......
 

(NEWS VIEW ஆகஸ்ட் 2011 இதழ்)

செத்துபோகும் சாவகங்கள்
















இரவுகளின் இம்சை
இன்னும் முடிந்தபாடில்லை

நிலவின் நிசப்தமும்,
விழிகளின்  ஞாபகிப்பும்
சாத்தானை நண்பனாக்கி....
அருளை தூரமாக்கி....
விஷம் பரப்புகிறது
மனதில் ......

மறை தந்த மாதமடா......!
கூவுகிறது  ஆன்மா....!
மனதின் மறுபக்கம்
இருள் தேடுகிறது
ஒளியில்...

சாவகங்கள் எல்லாம்
சாகின்றன........
ஞாபகங்களின் கறைகளினால்.....

நிலவும் நினைவும்
ஒத்தகருத்தாய்
என் அகராதியில்
கறை அவற்றின்
கல்லெழுத்தாய்

(சாவகம் -நோன்பு )

நீண்ட நாட்களுக்கு பிறகு

வாழ்க்கை ஒன்னும் நினைக்குற அளவுக்கு லேசானது இல்ல. ஏன்னா வலைப்பூ ஆரம்பிக்கும்போது நினைத்தேன் இதுல ரொம்ப கலக்கலாம்ன்னு . but முடியல, ஏன்னா நடுவில எவ்வளவோ பிரச்சினைகள் , மனக்குழப்பங்கள் இப்படி ஏகப்பட்டது. வாழ்க்கையில இப்படி இருக்கனும்ன்னு நம்மளுக்கு விரும்பின மாதிரி நாம plan பண்றோம். எங்கள படைத்த இறைவன் ஒரு மாதிரி plan பண்றான் . நாம ன்ன plan பண்ணாலும் இறைவன் நினைத்துதான் நடக்கும். so நாம அதுக்கு ஏற்ற மாதிரி வாழ பழக வேண்டும்.


ஓகே ஓகே என்னடா இவன் தத்துவம் பேசுறான்னு குழம்பாதீங்க.நான் குழம்பி போனதால இப்பிடியெல்லாம்  பேச தோனுது.இப்ப நான் ஓ. கே .. 

என்னோட நெறைய கவிதைகள்  இருக்கு.அதெல்லாம் இறைவன் நாடினால் இதுக்கு பிறகு எனூட வலைபூல உங்களுக்கு பாக்கலாம்.ஒ கே தானே.